பதிவு செய்த நாள்
04
செப்
2022
08:09
மந்தாரக்குப்பம்,: பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் 19ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்து வருகிறது. தினசரி சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.
மணமகன் கோலத்தில் விநாயகரும், மணமகள் கோலத்தில் சிக்தி, புக்தி சுவாமிகளுக்கு முறைப்படி பெண் அழைப்பு, சீர்வரிசை , பூ, பழங்கள், இனிப்புகள், ஊர்வலமாக எடுத்து சென்று மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு தாலிகட்டும் வைபவம் நடந்தது. பஜனை பாடல்கள் பாடி சுவாமிகளுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. ஏராளமான பக்தர்களுக்கு பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து, மொய்ப்பணம் கொடுத்தனர். பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இன்று மாலை 4:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில்
வீதியுலா நடைபெற்று, விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்படுகிறது.