பதிவு செய்த நாள்
20
ஆக
2012
11:08
திருச்சி: புனித ஆரோக்கிய மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சியிலிருந்து- வே ளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என, தெ ற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வரும் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வரை 11 நாட்களுக்கு இந்த ரயில் சேவை செயல்படும்.வண்டி எண்-06803, திருச்சி-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி சேவையாக, திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து காலை 11.45 புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரயில் பொன்மலை, திருவெறும்பூர், பூதலூர், தஞ்சை, நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். அதே போல் இந்த ரயில் எதிர்மார்க்கத்தில் வேளாங்கன்னியில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.35 மணிக்கு திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்து சேரும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சை, பூதலூர், திருவெறும்பூர், பொன்மலை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.அதேபோல் நாகப்பட்டிணம்-வேளாங்கண்ணி-நாகப்பட்டிணம் பயணிகள் ரயில் சேவையும் மேற்குறிப்பிட்ட 11 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. வண்டி எண்-06805, வேளாங்கண்ணி- நாகப்பட்டிணம் இடையேயான பயணிகள் ரயில், வேளாங்கண்ணியிலிருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு, பகல் 12.55 மணிக்கு நாகப்பட்டிணம் சென்று சேரும். எதிர்மார்க்கத்தில் இதேரயில் நாகப்பட்டிணத்தில் இருந்து பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு, பகல் 2.20 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.