பதிவு செய்த நாள்
13
செப்
2022
06:09
உளுந்தூர்பேட்டை: களமருதூர் ஸ்ரீ மருதாம்பிகை உடனுறை ஸ்ரீ மருதீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா களமருதூர் ஸ்ரீ மருதாம்பிகை உடனுறை ஸ்ரீ மருதீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 10ம் தேதி காலை 7 மணியளவில் அனுஞை, அங்குரார்பணம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாஹதி தீபாரதனை வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் யந்த்ர பூஜை, வேதபாராயணம், மூன்றாம் காலம் ஹோமம், தீபாரதனை வழிபாடு நடந்தது. நேற்று காலை 6 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணம், ஜெபம், 4ம் கால பூர்ணாஹதி தீபாரதணை வழிபாடு நடந்தது. காலை 9.15 மணிக்கு 5ம் கால பூர்ணாஹதி, 5ம் கால தீபாரதணை வழிபாடு நடந்தது. காலை 9. 50 மணிக்கு கும்பம் புறப்பாடும், காலை 10.10 மணியளவில் மகாராஜ கோபுரம், மூலவர் விமானம் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.