சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வுப் பணி துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2022 06:09
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 9 வது நாளாக நேற்று நகைகள் சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணி நடந்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிபார்ப்பு மற்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி முதல் கட்டமாக இந்த பணிகள் தொடங்கியது. இதுவரை இரண்டு கட்டங்களாக கடந்த இரண்டாம் தேதி வரை 8 நாட்கள் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகள் நடந்தது. அப்போது கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நடராஜர் கோவிலுக்கு வரப்பட்ட பல்வேறு நகைகள் மற்றும் காணிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டு அதன்படி நகைகள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் நேற்று 3வது கட்டமாக நடராஜர் கோவிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு கோவிலுக்கு வரப்பட்ட நகைகள் குறித்த ஆவணங்களை பார்வையிட்டு அதிகாரிகள் குழுவினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். 3வது கட்டமாக 9-வது நாளாக இன்று ஆய்வு பணி நடந்தது. இன்னும் சில தினங்களுக்கு ஆய்வு பணி நீடிக்கும் என இந்து சமய அறநிலையத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.