பல்லடம்: பல்லடம் அருகே, குன்னாங்க்கல்பாளையம் பிரிவில் உள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. செப்., 11ம் தேதி விக்னேஸ்வர பூஜை, பூர்வாக பூஜை, மற்றும் முதல் கால யோகா வேள்வியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு மூலஸ்தான விநாயகர் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று, இரண்டாம் கால வேள்வி, பூர்ணாஹீதி உள்ளிட்டவற்றை தொடர்ந்து, காலை, 6.30 மணிக்கு சித்தி விநாயகருக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. கொங்கணகிரி கோவில் அர்ச்சகர் தியாகராஜ குருக்கள், மற்றும் நாகேஸ்வர சிவம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.