மேலுார்: மதுரையில் நடைபெறும் ஆவனி மூலத் திருவிழாவான நரியை பரியாக்கிய திருவிளையாடல் மற்றும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழாவிற்காக மேலூர், திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்க வாசகர் செப். 4ல் புறப்பட்டார். பின்னர் செப். 9 ல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் இருந்து விடைபெற்ற மாணிக்க வாசகர் பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தவர் நேற்று கோயிலை வந்தடைந்தார்.