மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ்.எஸ்.கே., நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை கல்குறிச்சி பைபாஸ் ரோட்டில் எஸ்.எஸ்.கே., நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவர் விநாயகருக்கு சிவாச்சாரியார் ஐயப்ப குருக்கள் 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகளை செய்தார்.பின்னர் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்று விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது.விழாவில் எஸ்.எஸ்.கே.,நகர், செலுவதி நகர்,செந்தமிழ் நகர்,கலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்துச் சென்றனர். விழாற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி காளியப்பன் உள்பட பலர் செய்திருந்தனர்.