பதிவு செய்த நாள்
21
ஆக
2012
10:08
திருநெல்வேலி: பாளை.டிரைவர் ஓ.ஏ.,காலனியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் மழைவேண்டி தாராபிஷேகம் நடந்தது. பாளை.டிரைவர் ஓ.ஏ.,காலனியில் உள்ள வரசித்தி விநாயகர், விஸ்வநாத சுவாமி சமேத விசாலாட்சி அம்பாள் கோயிலில் மழை வேண்டி "தாராபிஷேகம் நேற்று துவங்கியது. செப்பு கலசத்தில் மூலிகை நீர் நிரப்பப்பட்டு விநாயகர் மற்றும் சுவாமியின் மீது மூலிகை நீர் விழும்படி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சுவாமியின் மனம் குளிர்ந்து உடனே மழைபெறலாம் என்பது ஐதீகம். தொடர்ந்து 11 நாட்கள் தாராபிஷேக பூஜைகள் நடக்கிறது. இதைமுன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் விநாயகர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மழைவேண்டி அப்பகுதியில் உள்ள பெண்கள் பக்தி பாடல்கள் பாடுகின்றனர். ஏற்பாடுகள் ஆலய தலைவர் வேம்பு தலைமையில் கோயில் நிர்வாகிகள் நல்லபெருமாள், மாயாண்டி பாரதி, குமரேசன், கணேசன், முருகன், ராஜாராம், செல்வராஜ், ஹரிராமன், பேராட்சிநாதன் மற்றும் அருணா தம்பதியினர் செய்துவருகின்றனர். பூஜை நிகழ்ச்சிகளை ரமணி அய்யர் செய்துவருகிறார்.