கூவம்-கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள கூவம் ஊராட்சியில் உள்ளது திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில்.இங்கு இந்த ஆண்டு நவராத்திரி விழா, வரும் 25ம் தேதி துவங்கி, ஒன்பது நாள் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், நடைபெறும்.பின் தினமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியலா நடைபெறும்.வரும் 4ம் தேதி மாலை, பரிவேட்டை உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.