சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் சுவாமி தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2022 04:09
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 06:40 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களிடம் இருந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மக்காத குப்பைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மதியம் ஒரு மணி வரை சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜா செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு டவுண்பஸ்கள் இயக்கப்பட்டது. வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புரட்டாசி அமாவாசை வழிபாடு, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல், ஆக.5 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, 13 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.