பதிவு செய்த நாள்
24
செப்
2022
04:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் கோடி ருத்ரர்கள் வழிபட்ட ருத்ரசிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் கோடி ருத்ரர்கள் வழிபட்ட ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி நேற்று மூலவருக்கும், நந்திக்கும், சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி மூலவர் அகத்தீஸ்வருக்கும், மூலிகையால் உருவாக்கப்பட்ட மஹா மூலிகை நந்தி சிலைக்கும் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீபாராதனை நடந்தது. சின்ன காஞ்சிபுரம் மணிகண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பக்தர்கள் ஓம் நமசிவாய என, 108 முறை எழுதி சுவாமியின் பாதத்தில் வைத்து வழிபட்டனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி கோவில், திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில், கருவேப்பம்பூண்டி காசிவிஸ்வநாதர் கோவில், உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.கோடீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி நேற்று மூலவருக்கும், நந்திக்கும், சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி மூலவர் அகத்தீஸ்வருக்கும், மூலிகையால் உருவாக்கப்பட்ட மஹா மூலிகை நந்தி சிலைக்கும் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீபாராதனை நடந்தது. சின்ன காஞ்சிபுரம் மணிகண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பக்தர்கள் ஓம் நமசிவாய என, 108 முறை எழுதி சுவாமியின் பாதத்தில் வைத்து வழிபட்டனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி கோவில், திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில், கருவேப்பம்பூண்டி காசிவிஸ்வநாதர் கோவில், உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.