திருப்புல்லாணியில் ராமாயண மகா வேள்வி செப்., 26 முதல் அக்.,4 வரை நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2022 06:10
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் சக்கரதீர்த்த தெப்பக்குளம் அருகே உள்ள மகா மண்டபத்தில் சம்பூர்ண ராமாயண மகா வேள்வி நடந்து வருகிறது. கடந்த செப். 26 முதல் அக்.,4 வரை காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை தேரழுந்தூர் ஸ்ரீ ராமன் பட்டர் சாமிகள் தலைமையில் நடக்கிறது. ராமாயணத்தில் உள்ள 24 ஆயிரம் பாசுரங்கள் பாடப்பட்டு, பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. ஸ்ரீரங்கம் பாலாஜி, பெங்களூரு ஆராவமுதன் பாலக்காடு சுப்பராமன், சென்னை ஸ்ரீதரன், மாயக்கூத்தன், நாராயணன், அனந்த நாராயணன், பேஸ்கர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.