பதிவு செய்த நாள்
05
அக்
2022
11:10
மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது.
சிறுமுகை அடுத்த, ஜடையம்பாளையம் ஊராட்சி, தென் திருமலையில் தென் திருப்பதி வாரி கோவில் உள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நேற்று காலை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள், பொது மக்கள் ஆகியோர் வடம் பிடித்து, தேரை இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கே.ஜி., நிறுவனத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.