பதிவு செய்த நாள்
05
அக்
2022
11:10
கூடலூர்: மசினகுடி, ஸ்ரீமசினியம்மன் கோவிலில் தசரா தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. முதுமலை மசினகுடி, ஸ்ரீ மசினியம்மன் கோயிலில், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தசரா திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மாயார் சிக்கம்மன் கோவிலிருந்து, சிக்கம்மனை பழங்குடி மக்கள் ஊர்வலமாக, மசியம்மன். கோவிலுக்கு எடுத்து வந்தனர். 26ம் தேதி முதல் 2ம் தேதி வரை தினமும சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று, முன் தினம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 9:00 மணிக்கு தேர் ஊர்வலம் துவங்கியது. தேர் முக்கிய சாலை வழியாக சென்றது. நேற்று, அதிகாலை 3:30 மணிக்கு, ஊட்டி சாலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து புறப்பட்ட தேர் காலை 6:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. காலை சிறப்பு பூஜைகளும்; பகல் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் அடைந்தது. மாலை முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று, ஸ்ரீ மச்சினியம்மன் சிறப்பு பூஜைகள் செய்து மாயாருக்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்படுகளை கோயில் கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்தனர்.