சாணார்பட்டி, சீரடி சாய்பாபாவின் 104வது மகா சமாதி தினத்தையொட்டி சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சீரடி சாய்பாபா விஜயதசமி அன்று மகா சமாதி அடைந்தார்.இதையொட்டி வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபா சிலைக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சாய்பாபா சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதில் நத்தம், கோபால்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.