பதிவு செய்த நாள்
06
அக்
2022
11:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருப்பணி வேலைகள் துவங்கும் பொருட்டு பாலாலயம் செய்வதற்கு முதற்கால யாக பூஜைகள் மகுட ஆகம விதிப்படி நேற்று நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி ஹோமங்கள் மற்றும் கோ பூஜைகள் கோயில் பட்டர் ரகு தலைமையில் நடந்தது. மாலை 4:00 மணிக்கு சக்தி எடுக்கும் பூஜை நடந்தது. இன்று பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்க உள்ளது. விழாவில் தக்கார் முத்துராஜா, செயல் அலுவலர் ஜவகர், கோயில் பட்டர்கள், ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். கோயிலில் ரூ. 64 லட்சம் செலவில் ராஜகோபுரத்திற்கு ஏக வர்ணம் பூசுதல், சுவாமி, அம்பாள் விமானத்திற்கு வர்ணம் பூசுதல், செராமிக் டைல்ஸ்கள் அகற்றுதல், எலக்ட்ரிகல், வயரிங் வேலைகள் செய்தல், தட்டோடு பதித்தல், வெளிப்பிரகாரம் உட்புறாரம் பழுது பார்த்து கல் பதித்தல், மதில் சுவர் பழுதுபார்த்தல், விநாயகர் தரைத்தளம் பழுது பார்த்தல், மூலிகை ஓவியங்கள் புதுப்பித்தல் செய்யப்பட உள்ளது.