ராமசாமி கோவிலில் இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2022 02:10
பொங்கலூர்: பொங்கலூர் கோவில்பாளையம் ராமசாமி கோவிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இங்கு கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்களே பூஜாரிகளாக உள்ளனர். திருப்பூர், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கமாக புரட்டாசி சனிக்கிழமைகளில் மழை பெய்வது வழக்கம். பக்தர்கள் சிலர் உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். கடந்த மூன்று வாரமாக மழை இல்லாமல் இருந்தது. இந்த வாரம் நல்ல மழை பெய்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பொங்கல் வைத்தும் மொட்டை அடித்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். நேற்று காலை முதல் மாலை வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.