பதிவு செய்த நாள்
15
அக்
2022
03:10
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையொட்டி, இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இதே போல பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், திருமலை நாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன்நிலையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதசாமி கோவில், ராவுத்துக்கொல்லனூர் உலகளந்த பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம் ஆதிமூர்த்தி பெருமாள் கோவில், காளிபாளையம் திருமலைராயப் பெருமாள் கோவில், சின்னதடாகம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, இன்று சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.