ஊட்டி கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2022 03:10
ஊட்டி: நீலகிரியில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிப்பட்டால் சனி பகவானின் பிடியிலிருந்து விடுபட்டு, காரியத்தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் என்று ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையல் இட்டு பெருமாளை வழிப்படுகின்றனர். கடந்த, 8 நாட்கள் பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 8 நாட்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி என்று சனி பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிப்பட்டனர். நாளை புரட்டாசி மாதம் 9வது நாள் பூஜையையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரம், பர்கர்களுக்கான சிறப்பு பூஜை நடைபெறுகிறது, ஊட்டி பெருமாள் கோவிலில் குருக்கல் ஹரிகிருஷ்ணசுவாமி தலைமையில் பூஜைகள் நடைபெறுகிறது. அதேபோல், மாவட்ட முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.