மதுரை : உலக நன்மைக்காக 2வது வருடமாக வரும் ஐப்பசி மாதம் 1ம் தேதி நாளை (18ம் தேதி) அன்று காலை மதுரை பழங்காநத்தம் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் காசி விஸ்வநாதருக்கு சூரிய (உதய) அஸ்தமன பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் மற்றும் அனைவரும் குருவருள் மற்றும் திருவருள் பெற கலந்து கொள்ளலாம். சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை இடைவிடாது தொடர்ந்து அர்ச்சனை நடைபெறுவதால் பிரார்த்தனைக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கோயிலில் வழங்கலாம். அன்று முழுவதும் பக்தர்கள் கலந்து கொள்வதற்காக கோவில் நடை திறந்தே இருக்கும்.