கம்மாபுரம்: காவனூர் அய்யனார் கோவிலில் கிராம மக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.கம்மாபுரம் அடுத்த காவனூர் அய்யனார் கோவில் திருவிழா நேற்று முன்தினம் காலை காப்பு கட்டி துவங்கியது. தொடர்ந்து அய்யனாருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.பகல் ஒரு மணிக்கு கிராம மக்கள், மண்ணாலான அய்யனார், குதிரை சிலைகளை சுமந்து ஊர்வலமாக வந்து, கோவிலில் ஊரணி பொங்கலிட்டு, சுவாமியை வழிபட்டனர். இரவு அய்யனார் வீதியுலா நடந்தது. தொடர்ந்து இன்றும், நாளை (25ம் தேதி) அன்னபடையலும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.