சதுரகிரியில் தொடரும் மழை; அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2022 08:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக, அக்டோபர் 22 முதல் 25 ந்தேதி முடிய சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.