பதிவு செய்த நாள்
19
அக்
2022
10:10
பள்ளிப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த, ஈச்சம்பாடி விஜயராகவ பெருமாள் கோவிலுக்கு, அஹோபில மடம், 46வது ஜீயர், ஸ்ரீவண்சடகோப ரங்கநாதயதீந்திர மஹாதேசிகன் சுவாமிகள் நேற்று வருகை புரிந்தார். திரளான வேத விற்பன்னர்கள், ஜீயரை வரவேற்றனர். பள்ளிப்பட்டு அடுத்துள்ளது விஜயராகவ பெருமாள் கோவில். சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில் புனரமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கால பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அஹோபில மடம், 46வது ஜீயர், ஸ்ரீவண்சடகோப ரங்கநாதயதீந்திர மஹாதேசிகன் சுவாமிகள், நேற்று ஈச்சம்பாடி விஜயராகவ பெருமாள் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்க, சென்னையில் இருந்து திரளான வேத விற்பன்னர்கள் வந்திருந்தனர். மாலை 3:00 மணியளவில், கோவிலுக்கு வருகை புரிந்த ஜீயரை, திரளான பக்தர்கள் வரவேற்றனர். வரிசையில் நின்று அவரிடம் ஆசி பெற்றனர்.