பதிவு செய்த நாள்
23
அக்
2022
10:10
திருவட்டார்: திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவிலில் ஐப்பசித்திருவிழா இன்று ( 23 ம்தேதி) கொ டி ஏற்றத்துடன் துவங்குகிறது. வைணவ திருத்தலமான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி திருவிழாவின் முதல் நாளான இன்று (23ம் தேதி) காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் திருக்கொடி ஏற்றப்படுகிறது.
தொடர்ந்து சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது. எட்டாம் நாள் இரவு 9 மணிக்கு வாலிவதம் கதகளி, 9ம் நாள் இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது. விழா நிறைவு நாள் காலை 6 மணிக்கு ராமாயாண பாராயணம், பகல் 11 மணிக்கு திருவிளக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு பரளி ஆறு நோக்கி எழுந்தருளல், நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது. இக்கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 6ம் தே தி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு இக்கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.