பதிவு செய்த நாள்
23
அக்
2022
10:10
நாமக்கல், வரும், 25ல், சூரிய கிரகணத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், நடை அடைக்கப்படுகிறது’ என, இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது, கோவில்களில் நடை அடைப்பது வழக்கம். அன்றைய தினம், எவ்வித பூஜை, வழிபாடும் இருக்காது. அதன்படி, வரும், 25ல், மதியம், 1:30 முதல், மாலை, 6:00 மணி வரை, இந்தியாவில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதையடுத்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், மதியம், 1:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, கிரகணம் முடிந்ததும், திருமஞ்சனம் செய்து, ராகு கால பூஜை நடத்தப்பட்டு, பின் நடை திறக்கப்படும். தொடர்ந்து, பக்தர்கர் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.