நத்தம், நத்தம் மாரியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை பூஜைகள் நடந்தது. இதில் பெண் பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். கோபால்பட்டி, சாணார்பட்டி, செந்துறை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதைப்போலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு திருமஞ்சனம், விஸ்வரூபூஜைகள் செய்யப்பட்டு தீபாவளி புத்தாடையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.