சூரிய கிரகணம் : ராமேஸ்வரத்தில் தீர்த்த சுவாமிகள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2022 10:10
ராமேஸ்வரம்: சூரிய கிரகணம் யொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் தீர்த்த சுவாமிகள் வீதி உலா வந்தனர். நேற்று ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை ஸ்படிகலிங்கம் பூஜை, கால பூஜை, சாயரட்சை பூஜைகள் முடிந்ததும், மதியம் 1:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. பின் மாலை 5 மணிக்கு கோயிலில் இருந்து சந்திரசேகர கவுரி தீர்த்த வாரி சுவாமிகள் சின்ன தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். சூரிய கிரகணம் மாலை 5: 21 மணிக்கு துவங்கியதும், தீர்த்த வாரி சுவாமிகள் பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனைதொடர்ந்து கோயில் ரதவீதியில் தீர்த்த வாரி சுவாமிகள் வீதி உலா வந்தனர். பின் மாலை 6:23 மணிக்கு சூரிய கிரகணம் முடிந்ததும், மாலை 6: 40 மணிக்கு கோயில் நடை திறந்து, சுவாமிக்கு கிரகண அபிஷேகம் நடந்தது. இதன்பின் இரவு 7 மணிக்கு பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.