பதிவு செய்த நாள்
25
ஆக
2012
03:08
தசரத சக்கரவர்த்தியின் பிள்ளைகளான ராமர், பரதர், லட்சுமணர், சத்ருக்கனருக்குரிய கோயில்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை ஒட்டி உள்ளன. நாலம்பலம் என்று குறிப்பிடப்படும் இக்கோயில்களை, புனிதமான ஆடிமாதத்தில் ஒரே நாளில் தரிசிக்க வாழ்வில் ஆனந்தம் நிலைக்கும். திருச்சூர் திருப்பிரயாறில் ராமரும், இரிஞ்ஞாலக்குடாவில் பரதரும், திருமூழிக்களத்தில் லட்சுமணரும், பாயம்மாலில் சத்ருக்கனரும் கோயில் கொண்டிருக்கின்றனர். அபூர்வமான இம்மூர்த்திகளை துவாபரயுகத்தில் கிருஷ்ணர் மனிதனாக பூமிக்கு வந்த போது, பூஜித்தார். அந்தச் சிலைகளே இந்தக் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வாழ்வுக்கு அடிப்படையானதை தர்மம், அர்த்த,காம, மோட்சம் (அறம்,பொருள், இன்பம், வீடுபேறு) என்று குறிப்பிடுவர். நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்த இந்த நான்கு சகோதரர்களை வணங்கினால் இந்த நான்கையும் அடையலாம். இப்பிறப்பில் வளத்துடன் வாழவும், மீண்டும் பிறவாவரம் பெறவும் இத்தலங்களைத் தரிசிக்கிறார்கள். நாலம்பல தரிசனம் செய்தால், தர்மநெறியில் பொருள் தேடும் முயற்சி உண்டாகும். நல்வழியில் இன்பம் அனுபவித்து வாழ்வின் இறுதியில் மோட்சகதியை அடையும் பாக்கியம் கிடைக்கும்.
திருப்பிரயாறு ராமர்கோயில்: எர்ணாகுளம்- குருவாயூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. திறக்கும்நேரம்: அதிகாலை3.30-மதியம்1, மாலை4-இரவு8. போன்: 0487-239 1375.
இரிஞ்ஞாலக்குடா பரதர்கோயில்: திருச்சூர்- கொடுங்கல்லூர் சாலையில் உள்ளது. திறக்கும்நேரம்: காலை3- பகல்11.30, மாலை5- இரவு8, போன்:0480-282 2631, 282 6631.
மூழிக்களம் லட்சுமணர்கோயில்: ஆலுவாய்க்கும் மாளுக்கும் இடையில் உள்ளது. திறக்கும்நேரம்: அதிகாலை4- பகல்11, மாலை4.30- இரவு9. போன்: 094002 00605(தற்காலிகம்)
பாயம்மால் சத்ருக்கனர்கோயில்: இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து தெற்கில் 7கி.மீ., திறக்கும்நேரம்: காலை5- பகல்12- மாலை4.30-இரவு9. போன்: 0480- 329 1396. திருப்பிரயாற்றிலும், இரிஞ்ஞாலக்குடாவிலும் தங்கும் வசதி உள்ளது.