ஒருநாளுக்கு ஒரு நட்சத்திரத்தை மட்டும் குறிப்பிடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2012 03:08
விண்வெளி மண்டலம் முட்டை வடிவில் உள்ளது. இப்பகுதியை ராசிமண்டலம் என ஜோதிடநூல்கள் கூறுகின்றன. கிரகங்கள் இயங்கும் சுற்றுப்பாதையை 12 மண்டலங்களாக, மேஷம் முதல் மீனம் வரை ராசிகளாகப் பிரித்தார்கள். 360 பாகை கொண்ட வான்மண்டல ஒளிவடிவப் பாதையின் அருகே அமைந்துள்ளவை 27 நட்சத்திரங்கள். சரியான ராசி மண்டல பாகைக் கணக்கீட்டிற்குள் இந்த 27 நட்சத்திரங்களே உள்ளதால் கோள்களின் சுற்றும்பாதைக் கணக்குப்படி நாளொன்றுக்கு ஒரு நட்சத்திரமே அமையும். எவ்வளவு கடினமான ஆராய்ச்சித்திறன் இருந்தால், நம் முன்னோர் பூமியில் இருந்தபடியே இவற்றை எல்லாம் கண்டுபிடித்திருப்பார்கள்? நாமும் இதனை உணர்ந்து மகிழ வேண்டும் என்பதற்காக விரிவாகச் சொல்லியிருக்கிறேன். எவ்வளவோ நட்சத்திரங்கள் இருந்தாலும் கோள்கள் இயங்கும் பாதையில் ஜோதிட கணக்கிற்கு அறியும்படியாகத் தெரிபவை 27 நட்சத்திரங்களே. அதனால் தினமும் ஒரு நட்சத்திரமாகத் தான் குறிப்பிட முடியும்.