பதிவு செய்த நாள்
28
அக்
2022
11:10
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு வாளகம் முழுவதும் வண்ணமின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. செ ங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது, திருப்போரூர் கந்தசுவாமி கோவில். இங்கு, மாசி பிரம்மோற்சவத்தின் போது, வள்ளி திருக்கல்யாண உற்சவமும், கந்தசஷ்டி விழா நிறைவில் தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கிறது.
இந்தாண்டு மகா கந்த சஷ்டி வைபவம் கடந்த 25ல் கொடியேற்றத்துடன் துவங்கி, 31ம் தே தி, திருக்கல்யாணவை பவத்துடன் நிறைவடைகிறது. இதற்கிடையில், தினசரி கந்தசுவாமி வள்ளி, தெய்வானையருடன் வீதியுலா வருகிறார். பிரதான சூரம்சம்ஹார விழா வரும் 30ல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கோவில் ராஜ கோபுரம், வட்ட மண்டபம், சுற்றுச்சுவர், சரவணபொய்கை குளம், நீராழி மண்டபம், 16 கால் மண்டபம் என, வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, இரவில் பிரம்மாண்டமாக ஜொலிக்கிறது. பிரதான ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி கோவில் அ மைந்திருப்பதால், சாலையில் செல்லும் ஏராளமான வாகன ஓட்டிகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.