அனுப்பர்பாளையம்: திருப்பூர், காலேஜ் ரோட்டில் கொங்கணகிரி கந்தப் பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதுமுதல், தினமும் கந்த பெருமானுக்கு விசேஷ யாகங்களும், விசேஷ அபிஷேகங்களும், நடைபெற்று வருகிறது. நாளை 30 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கந்த பெருமானுக்கு ஸ்கந்த ஹோமம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு கந்தபெருமான் வீர வேலோடு சூரனை வதை செய்யும் சூரசம்கார விழா நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு மகா தீபாரதனை நடக்கிறது. 31ம் தேதி (திங்கட்கிழமை) காலை 8:30 மணிக்கு கந்த பெருமானுக்கு மஹாபிஷேகம் நடைபெறுகிறது. 10:15 மணிக்கு முதல் திருக்கல்யாண வைபோவம் தொடங்கி நடைபெறுகிறது. மதியம் 12 : 15 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, மகா தீபாரதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவின் செய்து வருகின்றனர்.