ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் நடைமேடையில் மின்விளக்குகள் பழுதாகி இருளில் மூழ்கி கிடப்பதால் மக்கள் பாதிக்கின்றனர். ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிட அக்னி தீர்த்த கடற்கரை அருகில் 300 மீட்டர் தூரத்தில் நகராட்சி நடைமேடை அமைத்தது. இங்கு கடற்கரை பூங்கா, ராமாயண வரலாறு ஓவிய படங்கள் உள்ளதால் உள்ளூர் வெளியூர் மக்கள் ரசித்தனர். இந்நிலையில் நடைமேடையில் உள்ள 50 க்கு மேலான மின் விளக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன் பழுதானது. இதனை சரி செய்யாததால் நடைமேடை இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவில் குடிமகன்கள் போதையில் ரகளை செய்வதால் மக்கள் பீதியில் நடைமேடையில் செல்வதை தவிர்க்கின்றனர்.