திண்டிவனம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2022 03:11
திண்டிவனம் : திண்டிவனம் ராஜாங்குளக்கரை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இக்கோவிலில், கடந்த மாதம் 25ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. 30ம் தேதி இரவு 9;00 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.