சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடி காசிவிஸ்வநாதர் சுவாமி, விசாலாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலயம் நடந்தது. தென்கரை மூலநாதசுவாமி மற்றும் குருவித்துறை குரு பகவான் கோயில் பட்டர்கள் யாக வேள்வி பூஜைகள் செய்தனர். புனித நீரை சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சுவாமி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.