ஆலத்தூர் ரங்காயி கோவிலில் திருட்டு; போலீசார் விசாரணை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2022 04:11
திட்டக்குடி:ராமநத்தம் அடுத்த ஆலத்தூர் ஸ்ரீரங்காயி கோவில், உண்டியை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஆனந்தாயி, ஸ்ரீரங்காயி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது புனரமைப்பு பணிகள் நடக்கிறது. ஒருவாரத்திற்கு முன்பு ஸ்ரீரங்காயி கோவில், பூட்டு சாவி தொலைந்துபோனதால், பூட்டு உடைக்கப்பட்டது. அதன்பின் பூட்டு மாற்றப்படாததால் திறந்தநிலையிலேயே இருந்துள்ளது. நேற்று அவ்வழியே சென்ற மர்மநபர்கள், கோவிலுக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிச்சென்றனர். மேலும் சிலைகளுக்கு அடியில் ஏதாவது பணம், நகை வைக்கப்பட்டுள்ளதா என தேடிப்பார்த்துள்ளனர். எதுவும் கிடைக்காததால் சிலைகளை அப்படியே வைத்துவிட்டு சென்றனர். நேற்று மாலை, கோவிலுக்குச்சென்ற கிராம மக்கள் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் சென்ற ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.