அன்னூர்: முடுக்கன்துறை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. பொகலூர் ஊராட்சி, முடுக்கன் துறையில் பழமையான அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில் காப்பு கட்டுதலும், இரவு முதற்கால வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 11ம் தேதி அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி நடக்கிறது. காலை 9:30 மணிக்கு, விமான கோபுரம், அய்யனார், பால கணபதி, பால முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடக்கிறது.