பதிவு செய்த நாள்
10
நவ
2022
06:11
சூலூர்: பொன்னாக்காணி மாரியம்மன் மற்றும் செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த பொன்னாக்காணி கிராமத்தில் உள்ள, மாரியம்மன் மற்றும் செல்லாண்டி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு இரு நாட்களுக்கு முன் திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன் தினம் அம்மை அழைத்தல் நடந்தது. போகம்பட்டி, பொன்னாக்காணி, பனப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்று பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை ஒட்டி , போகம் பட்டி கிராமத்தில் மட்டும், 100 க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் நேற்று வெட்டப்பட்டன. அனைத்து வீடுகளுக்கும் உறவினர்கள் திரண்டு வந்திருந்தனர்.
பள்ளிகள் வெறிச்: பொன்னாக்காணி திருவிழாவை ஒட்டி, சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு விழாவுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால், மாணவர்கள் வருகை இல்லாமல், பெரும்பாலான பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டது.