பதிவு செய்த நாள்
12
நவ
2022
03:11
திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக, ரூ.2.22 கோடி கிடைத்தது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணம் மாதந்தோறும் 2 முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி, முதல் முறையாக கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் துவங்கி 2 நாட்கள் நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர்(பொ) அன்புமணி, அறங்காவலர்கள் ராம்தாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், துணை ஆணையர் வெங்கடேஷ், நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், துமக்கள் பிரதிநிதிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து, ரூ.2 டியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893 கிடைத்தது. மேலும், தங்கம் 1 கிலோ 193 கிராமும், வெள்ளி 15 கிலோவும், 234 வெளிநாட்டு பணமும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.