நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2022 07:11
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2023ம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு துவங்கியது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2023ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் அபிஷேகத்துக்கு, நேற்று முன்பதிவு துவங்கியது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா துவக்கி வைத்தார். ஆண்டுக்கு, 365 நாட்களில், 12 நாட்கள், கோவில் நிர்வாகம் சார்பில், அபிஷேகம் செய்யப்படுகிறது. 353 நாட்களுக்கு, தினமும் ஐந்து கட்டளைதாரர் வீதம், 1,765 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதல் நாளான நேற்று, 31 நாட்களுக்கான அபிஷேகம், பூஜைக்காக, 155 பேர் முன்பதிவு செய்தனர்.