பதிவு செய்த நாள்
14
நவ
2022
04:11
மதுரை: வருகின்ற 17ம் தேதி அன்று, விஷ்ணுபதி பூஜை, மேலூர் அருகே உள்ள தும்பைபட்டி, சிவாலயபுரம் கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர், என்னும் திவ்யத் திருத்தலத்தில் உள்ள சங்கர நாராயணர் கோயிலில் அபிஷேக, ஆராதனைகளுடனும், தான தர்மங்களுடனும் தர்ப்பணப் பூஜைகளுடனும் நடைபெற விருக்கிறது.
விஷ்ணுபதி பூஜா பலன்கள் :
1. பெற்றோர்களை /உடன் பிறந்தோரை /மனைவியைப் பிறர் சொற்கேட்டு வதைத்த / துரத்தியத் துன்பங்களுக்குப் பிராயச்சித்தமும்.
2. தகாத, தீய, மனதைக் குத்தும், வேதனைப்படுத்தும் முறையற்ற வார்த்தைகளைக் கொட்டியதற்கான தீராப் பழி தீரவும்.
3. குரோதம், பொறாமை, அந்தஸ்து, பதவி காரணமாகப் பிறருக்கு (அறிந்தே) இழைத்த துன்பங்களுக்குப் பிராயச்சித்தமும்.
4. பெரியோர்களை, மஹான்களை நிந்தித்தமைக்கான பரிஹாரமும் ஸ்ரீ விஷ்ணுபதிப் பூஜா பலன்களாகக் கிட்டும்.
தாம் செய்த தவறுகட்கு மனதார வருந்தி, பாதிக்கப்பட்டவர்கட்குத் தக்க நிவாரணங்களை அளித்து வந்திட, எத்தனையோ ஜென்மங்களுக்குத் தொடரவிருக்கின்ற தம் பிள்ளைகளைப் பற்றி வருத்தமும் மனவேதனைகளும் கொண்டிருக்கின்ற தாய்மார்கள் ஏராளம். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் விஷ்ணுபதியன்று இங்கு அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபட்டு, பெருமாளுக்கு அப்பமும், சர்க்கரைப் பொங்கலும் படைத்து ஏழைகளுக்கு பொன் மாங்கல்யத்தை அளித்திட மன அழுக்குகள் நீங்கி, அருவருக்கத்தக்க, பாசி படிந்த வாழ்க்கை நினைவுகளுக்கு, நிகழ்ச்சிகளுக்குத் தக்கப் பரிஹாரங்களை இறையருளால் பெறுவர். முக்கியமாக நீண்ட காலமாக திருமணம் தடை உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது மிகவும் பாக்கியம் அனைத்து தடைகளும் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும். சித்தர்கள் காட்டிய வழியில் நடத்த படுகிறது. வாத்தியார் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சித்தர் அருளோடு நடைபெறும்.
வரும் 17ந்தேதி கார்த்திகை மாதம் 1-ம் தேதி வியாழக்கிழமை காலை 6.00 மணிமுதல் 11.00 மணி வரை நடைபெறும். மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலை, மேலூர் அருகே 6 கி.மீ. தூரத்தில், சங்கர நாராயணர் திருக்கோயில் உள்ளது. டவுன் பஸ் வசதி உள்ளது. மெயின் ரோட்டின் அருகில் திருக்கோயில் அமைந்துள்ளது.