அன்னூர்: கார்த்திகை மாத, முதல் நாளான நேற்று ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
கார்த்திகை மாத முதல் நாளான நேற்று ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், அதிகாலை 3:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜையும், இதையடுத்து அலங்கார பூஜையும் நடந்தது. நேற்று ஒரே நாளில் 140 பேர் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஓரைக்கால் பாளையம், தர்மசாஸ்தா கோவிலில், 25வது ஆண்டாக நேற்று பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. 40 பேர் மாலை அணிந்து விரதம் துவக்கினர். ஐயப்பனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. கஞ்சப்பள்ளி மற்றும் அ.மேட்டுப்பாளையத்தில் ஐயப்பன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். ஐயப்பனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.