பதிவு செய்த நாள்
22
நவ
2022
06:11
மேட்டுப்பாளையம்: வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், பிரதோஷ வழிபாடும், சிறப்பு பூஜையும் நடந்தது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் சன்னதி உள்ளது. கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு பூஜை, சுவாமிக்கு செய்யப்பட்டது. இப்பூஜையில், வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, பால், தயிர்,தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. பின்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.