திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மண்டபத்தில் சுண்ணாம்பு, காவி நிறம் அடிக்கும் பணி துவங்கியது. மழை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தாமிர கொப்பரை வைத்து டிச. 6ல் திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படும். அதற்காக அம்மண்டபங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு தற்போது வெள்ளை அடிக்கப்படுகிறது. இரண்டு நாட்களில் மண்டபத்தைச் சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படும். மலையின் அடிவாரத்திலிருந்து உச்சிப்பிள்ளையார் மண்டபம் வரை உள்ள செடி கொடிகள் அகற்றும் பணிகளும் விரைவில் துவங்க உள்ளது.