சின்னமனூரில் 10 நாட்களுக்கு லட்சார்ச்சனை : 60 நாட்களுக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2022 04:11
சின்னமனூர்: சின்னமனூரில் நாளை (நவ.30) முதல் 10 நாட்களுக்கு ஐயப்பனுக்கு லட்சார்ச்சனையும், 60 நாட்களுக்கு வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் இங்குள்ள மணிமண்டபத்தில் நடைபெறுவதாக குருசாமி லோகேந்திரராசன் தெரிவித்துள்ளார்.
சின்னமனூரில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், ஐயப்பன் பஜனை மடம் இங்குள்ள மணிமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மண்டல பூஜை சீசனில் 10 நாட்களுக்கு லட்சார்ச்சனையும், ஐயப்பனுக்கு ஆராட்டு விழாவும் நடைபெறும். இந்தாண்டும் நாளை ( நவ.30) முதல் டிச. 9 வரை 10 நாட்களுக்கு ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். இரண்டு மாதங்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். லட்சார்ச்சனை நிறைவுபெற்ற மறுநாள் முல்லைப்பெரியாற்றில் ஆராட்டு நடைபெறும். தொடர்ந்து லெட்சுமிநாராயணா பெருமாள் கோயிலில் உள்ள நெல்லிமரத்துக்கு பூஜையும், அன்னதானமும் நடைபெறும். ஐயப்பா சேவா சங்க தலைவர் பெருமாள் தலைமையில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக குருசாமி லோகேந்திரராசன் தெரிவித்துள்ளார்.