பதிவு செய்த நாள்
30
நவ
2022
04:11
சூலூர்: கரவழி மாதப்பூர் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், டிச., 4 ம்தேதி நடக்கிறது.
கரவழி மாதப்பூரில் உள்ள விநாயகர் மற்றும் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் பழமையானது. இங்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழா, வரும், டிச., 2 ம்தேதி காலை, 9:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. நான்கு கால ஹோமங்கள், பூர்ணாகுதி முடிந்து, வரும், டிச., 4 ம்தேதி, காலை, 6:00 மணிக்கு விநாயகருக்கும், 8:00 மணிக்கு, பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, அம்மன் ஒயிலாட்ட குழுவின் ஒயிலாட்டமும், அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும் நடக்கிறது. திருப்பணி குழுவினர், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.