திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டிற்கு பின்பு தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2022 04:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிச. 6 காலை 11:15 மணிக்கு நடக்கும் கார்த்திகை திருவிழா தேரோட்டத்திற்காக 16கால் மண்டபம் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ள சிறிய வைரத்தேர் 2 ஆண்டுகளுக்கு பின்பு அலங்கரிக்கும் பணி நடக்கிறது.
கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத்தேர் பங்குனி திருவிழாவில் திருக்கல்யாணம் முடிந்து மறுநாள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள கிரிவீதியில் தேர் வலம் வரும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த தேரோட்டம் நடக்கும். ஆண்டுக்கு 2 முறை: 16 கால் மண்டபம் நிலை நிறுத்தப்பட்டுள்ள சிறிய வைரத் தேர் தெப்பத் திருவிழா, கார்த்திகை திருவிழாக்களில் ரத வீதிகளில் வலம் வரும். கொரோனா தடை உத்தரவால் 2020ல் கார்த்திகை திருவிழா உள்திருவிழாவாக நடத்தப்பட்டது. 2021 திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும் தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பின்பு இந்த ஆண்டு டிச. 6 காலையில் தேரோட்டம் நடக்கிறது. அதற்காக தேர் சுத்தம் செய்யும் பணி நேற்று துவங்கியது. அப்பணி முடிந்தவுடன், குடை துணிகளால் தேர் அலங்கரிக்கும்பணி நடக்கும்.