Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மசாஸ்தா கோவிலில் தசாவதார ... திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கௌசிக ஏகாதசி வழிபாடு திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டிச.6ல் மலைக்கோயில் செல்ல ஒரு வழி பாதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2022
10:12

பழநி: பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா அன்று மலைக் கோயிலுக்கு ஒரு வழிப்பாதையில் பக்தர்கள் செல்ல வேண்டும். தங்க ரதம் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா (நவ.30) முதல் டிச.,6 வரை நடைபெற்று வருகிறது. திருக்கார்த்திகை தினமான டிச.6.,அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4:30 மணிக்கு விழா பூஜை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 4:45 மணிக்கு சின்ன குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வருவார். அதன்பின் தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். திருக்கார்த்திகை தினத்தில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என கருதி பாதுகாப்பு காரணமாக, மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல குடமுழுக்கு நினைவரங்கம், வழியாக மேலே செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் பயன்படுத்த வேண்டும். அன்றைய தினம் மலைக்கோயில் செல்லும் பாதை ஒரு வழி பாதையாக பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த பிற்பகல் 2:00 மணி அளவில் குடமுழுக்கு நினைவரங்கம், தற்காலிகமாக அடைக்கப்படும். அதன் பின் மாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மலைக்கோயில் செல்ல பயன்படும் வின்ச், ரோப் கார் வழக்கம் போல் செயல்படும். தங்கரத புறப்பாடு நிறுத்தம்: கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு தீபத்திருநாளான டிச.,6 அன்று மட்டும் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. மலைக்கோயிலில் மகாதீபம் ஏற்றிய பின் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில், பெரிய நாயகி அம்மன் கோயில் ஆகியவற்றில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar