பதிவு செய்த நாள்
05
டிச
2022
10:12
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, போடிபாளையம் ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயர் பஜனை கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது.
காமாட்சியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம், முளைப்பாரி கொண்டு சென்று, ரக் ஷா பந்தனம், அனுக்ஞை, விஷ்வக்சேன ஆராதனம், வாஸ்து சாந்தி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீ ஆஞ்சநேயர், மஹா கணபதி மூர்த்திகளுக்கு பிம்ப சுத்தி மஹா அபிேஷகம், தீபாராதனை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, திருப்பள்ளியெழுச்சி, மஹா கணபதி ேஹாமம், ஸ்ரீ ராம நப ஜெப ேஹாமம், அஷ்டலக் ஷமி ேஹாமம், மஹா சுதர்சன ேஹாமம் உள்ளிட்ட பூஜைகளும், இரண்டாம் கால ேஹாமம் நிறைவு பூஜைகள் நடைபெற்றன. காலை, 8:00 மணிக்கு ஆஞ்சநேயர் விமான கலசத்துக்கு மஹா கும்பாபிேஷகம், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், மஹா கணபதி பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிேஷகம் நடந்தது. அதன்பின், தசதானம், தச தரிசனம், மஹா அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.