மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதனால் கோவிலுக்கு தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலில் இன்று கிருத்திகை சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. காலை, 10:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகமும், 12:30 க்கு பூஜை மற்றும் தீபாராதனையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மேலும் மாலை, 6:00 மணிக்கு கோவில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. பூஜைக்கான ஏற்பாடுகளை, திருமுருக பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.