உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே உள்ள திடியன் பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திடியன் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 1000 மீ., உயரமான மலையின் உச்சியில் 128 கிலோ நெய், 80 மீட்டர் துணி கொண்டு திரி கொண்டு செய்திருந்தனர். மலை உச்சியில் உள்ள தங்கமலைராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின் பக்தர்கள் முன்னிலையில், அர்ச்சகர் வெங்கிடு, பா.ஜ., மருத்துவபிரிவு செயலாளர் விஜயபாண்டியன்,தீபம் ஏற்றினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.